2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எம்.எப்.ஜெஸீரா, எஸ்.எம்.மும்தாஜ்)

புத்தளம் பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பலர் மிகுந்த அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இன்று காலை தொழில்கள் நிமித்தம் மோட்டார் சைக்கிள்களில் சென்ற பலர் தமது பெற்றோல் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்ற போது அங்கு தொங்கவிடப்பட்டிருந்த 'பெற்றோல் இல்லை' என்ற அறிவித்தலைப் பார்த்து மிகுந்த ஏமாற்றத்திற்குள்ளாகினர்.

மதுரங்குளி நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் 'பெற்றோல் இல்லை' என்ற அறிவித்தல் தொங்கியதைக் காண முடிந்ததுடன் அங்குள்ள ஒரு நிலையத்தில் பெற்றோல் வழங்கப்பட்டதால் அங்கு பெற்றோல் பெற்றுக் கொள்வதற்காக மிக நீண்ட வரிசையில் மோட்டார் சைக்கிள்களும், முச்சக்கர வண்டிகளும் நின்றதையும் காண முடிந்தது. எனினும் மாலையுடன் அங்கும் 'பெற்றோல் இல்லை' என்ற அறிவித்தல் காணப்பட்டது.

இந்த நிலை காரணமாக பலர் தமது மோட்டார்  சைக்கிள்களை உருட்டிக் கொண்டு சென்றதையும், அருகில் இருந்த தெரிந்தவர்களின் வீடுகளில் நிறுத்திவிட்டு தமது பயணத்தை மேற்கொண்டதையும், தூர இடங்களுக்குச் செல்வோர் வீதியில் தவித்துக் கொண்டு நின்றதையும் காணமுடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X