2025 மே 23, வெள்ளிக்கிழமை

விளையாட்டு கட்டிடத் தொகுதிகு அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஒக்டோபர் 24 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)

புத்தளம் மாவட்ட விளையாட்டுக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நேற்று மாலை புத்தளம் நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

மாகாண மற்றும் மாவட்ட விளையாட்டரங்குகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்திற்கான விளையாட்டரங்கு தொகுதி புத்தளத்தில் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக 200 மில்லியன் ரூபாய்; மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் மற்றும் வடமேல் மாகாண விளையாட்டுத்துறை, இளைஞர்  விவகார அமைச்சர் அசோக வடிகமங்காவ ஆகியோரின் அழைப்பின் பேரில் வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ ஆர் பலல்ல, உள்ளூர் விமான சேவைகள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, வடமேல் மாகாண அமைச்சர் சனத் நிஷாந்த பெரேரா உட்பட வடமேல் மாகாண சபை, உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.  



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X