2025 மே 23, வெள்ளிக்கிழமை

கடத்தல் மற்றும் கப்பம் குற்றச்சாட்டில் கைதானவர்கள் பிணையில் விடுதலை

Kogilavani   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)                     
முச்சக்கர வண்டி சாரதியொருவரைக் கடத்திச் சென்று  கொலை செய்வதாக அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா கப்பம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பெண்ணொருவர் உட்பட ஐவரை 25 ஆயிரம் ரூபா பிணை மற்றும் 3 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில்; விடுதலை செய்யுமாறு  தமுத்தேகம நீதவான் சாமர கெக்கிரிதெனிய நேற்று உத்தரவிட்டார்.

ஒவ்வொருவருக்கும் தலா 5000 ரூபா பிணையும் 75000 ரூபா சரீரப் பிணையும் விதிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம், ஒயாமடுவ மற்றும் தம்பிருகடவள பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், கடந்த 5ஆம்; திகதி முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவரை கடத்தி அவருடைய தந்தையிடம் 3 இலட்சம் ரூபா கப்பம் கேட்டதோடு இல்லாது போனால் கொலை செய்யப்போவதாக அச்சுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக ஆட்டோ சாரதியின் தந்தை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸ் நிலையக் குற்றத்ததடுப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்து சிறாவஸ்திபுர பகுதியில் வைத்து பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X