2025 மே 23, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் சனிக்கிழமை தோறும் வாராந்த சந்தை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறுகின்ற வாராந்த சந்தை அடுத்த வருடம் (2013ஆம் ஆண்டு) ஜனவரி மாதத்திலிருந்து சனிக்கிழமைகளில் நடைபெறுமென புத்தளம் நகரசபைத் தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

புத்தளம் நகர வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் புத்தளம் பொதுநூலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இதனைக் கூறினார். 

அத்துடன், எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து புத்தளம் நகரின் நாளாந்தச் சந்தை இரவு 12 மணிவரை திறந்திருக்கும். இந்நிலையில், தூரவுள்ள பயணிகளின் நலன் கருதி கற்பிட்டி உட்பட ஏனைய பிரதேசங்களுக்கும் இரவு நேர பஸ் சேவை நடத்தப்படுமெனவும்  புத்தளம் நகரசபைத் தலைவர் தெரிவித்தார்.

இதன்போது புத்தளம் நகரின் குருநாகல் மற்றும் கே.கே.வீதிகளின் ஒரு வழிப் போக்குவரத்து தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கலந்துரையாடலில் புத்தளம் நகரசபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X