2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை

Kogilavani   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 08:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழைக் காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புத்தளம் மாவட்ட காரியாலயத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.

புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் சிலாபம், பங்கதெனிய, நாத்தாண்டிய, பல்லம ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மதஸ்தலங்கள், பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் புத்தளம் மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் விபரங்கள் தற்போது  திரட்டப்பட்டு வருகின்றது.
இதேவேளை, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிபுரம் பகுதி வெள்ளத்தினால் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய பிரதேசங்களிலும் ஆங்காங்கே வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை புத்தளம் சிலாபம் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கு காரணமாக சிலாபம் - புத்தளம் பஸ் போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், புத்தளம் - சிலாபம் பஸ் போக்குவரத்து உடப்பு சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X