2025 மே 22, வியாழக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மாற்றுக் காணிகள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 22 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)
வெள்ளப் பெருக்கினால் அடிக்கடி பாதிக்கப்படும் வடமத்திய மாகாணத்திலுள்ள குடும்பங்களுக்கு மாற்று காணி வழங்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

வெள்ளப் பெருக்கினால் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் சேகரிக்கப்பட்டு கமநல சேவைகள் அமைச்சு மற்றும் மாகாண சபை ஆகியன இணைந்து நஷ்டஈடு வழங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை வெள்ளப் பெருக்கினால் பொலன்னறுவை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள 2800 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் 33 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அநுராதபுரம் மாவட்டத்தில் கட்டியாவ, பொக்குனுகம, சேனபுர, ஹுரிகஸ்வௌ, ரம்பாவ, அநுராதபுரம் லேன் பகுதி ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X