2025 மே 22, வியாழக்கிழமை

அநுராதபுரம் சிறைச்சாலையின் தைப்பொங்கல் பண்டிகையில் முன்னாள் போராளிகள்

Super User   / 2013 ஜனவரி 15 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழீழ விடுதலை புலியகள் இயக்க முன்னாள் போராளிகள் தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பல்வேறு குற்றச் செயல்களின் அடிப்படையில் அநுராதபுரம் சிறைச்சாலையின் விசேட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் எல். டீ. டீ. ஈ உறுப்பினர்கள் உட்பட 319 பேர் நேற்று திங்கட்கிழமை தைப்பொங்கல் பண்டிகையைக் கொண்டாட சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

அநுராதபுரம் திறந்த சிறைச்சாலையின் அதிகாரி துசித உடுநுவர மற்றும் பிரதான ஜெய்லர் வீ. பீ. தென்னகோனின் தலைமையில் தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

19 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் மற்றும் 300 ஏனைய சிறைக் கைதிகள் ஆகியோர் இக்கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X