2025 மே 22, வியாழக்கிழமை

குளங்களின் புனரமைப்பு பணிகளில் இராணுவ வீரர்களை ஈடுபடுத்த நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜனவரி 17 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம். சீ. சபூர்தீன்                      

வடமத்திய மாகாணத்திலுள்ள 3200 குளங்களைப் புனரமைப்புச் செய்வதற்காக இராணுவ வீரர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோடாபாய ராஜபக்ஷ ஆகியோர்களிடம் செய்த வேண்டுகோளுக்கமைவாக இராணுவ வீரர்களைப் பயன்படுத்தி குளங்களைப் புனரமைப்புச் செய்ய அனுமதி கிடைத்துள்ளது.

ஒப்பந்த அடிப்படையில் குளங்களை அபிவிருத்தி செய்யாது மாகாண சபையிலுள்ள உபகரணங்களை பயன்பாட்டிற்கு எடுத்து  இராணுவ வீரர்களைப் பயன்படுத்தி அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

குளங்களை புனரமைப்புச் செய்யும்போது ஒப்பந்தக்காரர்களால் முறைப்படி குளங்கள் புனரமைப்புச் செய்யப்படுவதில்லை என விவசாய சங்கங்களினால் தனக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என முதலமைச்சர் தெரிவித்தார்.

வடமத்திய மாகாணத்திலுள்ள 3200 சிறிய குளங்களைப் புனரமைத்து அதிக நீரை சேமித்து வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதோடு பல வருடக்கணக்காக புரமைக்கப்படாது பாழடைந்துள்ள குளங்களைப் புனரமைத்து அக்குளங்களை அண்டிய பகுதிகளில் மக்களை குடியமர்த்தவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X