2025 மே 22, வியாழக்கிழமை

'ஐ.தே.க.வுக்கு அதிகாரத்தை பறித்துகொள்வதில் பேராசை ஏற்பட்டுள்ளது'

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்                            

'24 தேர்தல்களில் தோல்வியுற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு அதிகாரத்தைப் பறித்துக் கொள்வதில் பேராசை ஏற்பட்டுள்ளது. அரச அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்திருக்கும் சேறு பூசும் நடவடிக்கையே இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மடைமைத்தனமான செயலாகும்' என வடமத்திய மாகாண முதமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

'அரச சொத்துக்களை விற்றமை, அரச துறையில் தொழில் வாய்ப்புக்களை வழங்காமை, வெளிநாடுகளுக்கு நாட்டை சூறையாடக் கொடுத்தமை, திறந்த பொருளாதார முறையை நாட்டிற்கு கொண்டு வந்து கைத்தொழில் துறையை சீரழித்தமை ஆகியவற்றையே ஐ.தே.க அரசாங்கம் கடந்த காலங்களில் செய்துவந்தது. இதனால் மக்கள் அக்கட்சியினை விரட்டியடித்துள்ளனர்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X