2025 மே 23, வெள்ளிக்கிழமை

உண்டியல் திருட்டு: மாணவர்கள் இருவருக்கு பிணை

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் சேமித்து வந்த உண்டியலொன்றை திருடிச் சென்றதாக கூறப்படும் சிறுவர்கள் இருவர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கலெண்பிந்தனுவௌ சிவலாக்குளம் முன்பள்ளி பாடசாலை மாணவர்கள் சேமித்து வந்த உண்டியலொன்றை திருடிச் சென்றதாக இந்த இரு மாணவர்களுக்கும் எதிராக அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

சிறுவர்கள் இருவரையும்  ஒரு இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறும் அடுத்த வழக்குத் தொடரின் போது நன்னடத்தை அறிக்கையினை சமர்பிம்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

கெட்டியாம்ப மற்றும் மதுகம பகுதிகளைச் சேர்ந்த 9, 16 வயதுடைய  சிறுவர்களே  இவ்வாறு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்பள்ளி மாணவர்களால் உண்டியலில் சேமிக்கப்பட்ட 869 ரூபாவை சந்தேக நபர்கள் திருடிச்சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X