2025 மே 22, வியாழக்கிழமை

காற்றினால் சேதமான வீடுகளுக்கு துரித கதியில் கூரைத் தகடுகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

இப்பலோகம ரணஜயபுர கிராமத்தில் வீசிய பலத்த காற்றினால் சேதமான  வீடுகளுக்கு துரித கதியில் கூரைத் தகடுகளும் உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,  வடமத்திய மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய ஆலோசனையை அடுத்து இவ்வுதவித் திட்டங்கள் 6 மணித்தியாலயங்களுக்குள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றினால் ரணஜயபுர கிராமத்தில் 18 வீடுகளும் 10 வியாபார நிலையங்களும் ரணஜயபுர வித்தியாலயமும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.

இதேவேளை சேதத்திற்குள்ளாக்கப்பட்ட ரணஜயபுர வித்தியாலயத்தின் சேத விபரங்களை உடனடியான தனக்கு வழங்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளதோடு சேத விபரம் கிடைக்கப்பெற்றவுடன் துரித கதியில் புனரமைப்புச் செய்வதாகவும் முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X