2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாணத்தில் துரித கிராமிய அபிவிருத்தித் திட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 05 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாண கிராமங்களின் அபிவிருத்தியை முன்னிட்டு துரித கிராமிய அபிவிருத்தித் திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

துரித கதியில் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கிராமங்களின் விபரங்கள் அதிகாரிகளினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கிராமிய அபிவிருத்திக்கான அனுமதியை மாகாண சபை வழங்கியுள்ளது. கிராமங்களின் அபிவிருத்திப் பணிக்கென மாகாண சபையினால் கனரக வாகனங்கள், இயந்திர உபகரணங்கள் மற்றும் பௌதீக வளங்களும் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X