2025 மே 22, வியாழக்கிழமை

கிவ்ளேகட குள புனரமைப்புக்கு மேலும் நிதி தேவை

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வெள்ளப்பெருக்கினால் உடைப்பெடுத்த ஹொரவப்பொத்தானை கிவ்ளேகட குளத்தின் புனர்நிர்மாணப் பணிக்காக இன்னும் 80 மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதாக அநுராதபுரம் வலய நீர்ப்பாசன பணிப்பாளர் எஸ்.எம்.டீ.எல்.கே. த அல்விஸ் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கின்போது கிவ்ளேகட குளத்தின் கட்டு உடைப்பெடுத்திருந்தது. இதன் புனர்நிர்மாணப் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதோடு இதுவரையில் இதற்காக 90 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.

எஞ்சிய 80 மில்லியன் ரூபா நிதி கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் செப்டெம்பர்; மாதத்திற்குள் புனர்நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய முடியும்.

இடையே மழை குறுக்கிட்டால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X