2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

இராணுவ வீரருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2013 மார்ச் 09 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வீடொன்றினுள் புகுந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றைத் திருடிச் சென்ற சந்தேக நபரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை இம்மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பதில் கடமை புரியும் மஜிஸ்திராத் அமரசிரி ஹெட்டிகே உத்தரவிட்டார்.

தோடஅலிபொத்தானை, மெகொடவௌ பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கலென்பிந்துனுவௌ கோமரன்கடவள பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து இத்திருட்டை சந்தேகநபர் மேற்கொண்டிருந்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X