2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நூல்நிலையம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 15 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


செலான் வங்கியின் 25ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் புனரமைக்கப்பட்ட நூல்நிலையம் இன்று வெள்ளிக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.

செலான் வங்கியின் நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட இந்நூல்நிலையத்துக்கு அவ்வங்கியினால் புத்தகங்களும் கையளிக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் சுமையா ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செலான் வங்கியின் பொதுமுகாமையாளர் கபில ஆரியரத்ன, பிரதி முகாமையாளர்கள்,  உயரதிகாரிகள், கல்வித் திணைக்கள அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X