2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் சுதந்திரக்கட்சியில் இணைவு

Kogilavani   / 2013 ஏப்ரல் 05 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.என்.எம்.ஹிஜாஸ்

வடமாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டு புத்தளத்தில் வாக்குகளினை பதிவு செய்துள்ள நூற்றுக்கும் மேற்பட்ட யாழ். முஸ்லிம் மக்கள் சுதந்திர கட்சியில் இணைந்துகொண்டனர்.

புத்தளம் நகரபிதாவின் இணைப்பாளர் முயின் தலைமையில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தில்லையடி பிரதேசத்தில் நடைப்பெற்ற பொது கூட்டத்தின் போது புத்தளம் தொகுதி சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தில்லையடி பிரதேசத்தில் வதியும் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் சுதந்திர கட்சியின் அங்கத்துவங்களினை பெற்றுக்கொண்டனர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான சட்டதரணி கமறுதீன், சிந்தக மாயாதுக்க, முன்னாள் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.எம்.சபறுள்ளா, முந்நாள் நகர சபை உறுப்பினர் சத்ரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X