2025 மே 21, புதன்கிழமை

விபத்தில் ஒருவயது பேத்தியுடன் பாட்டி பலி

Kogilavani   / 2013 ஏப்ரல் 10 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.முஸப்பீர், ஜே. இசெட். ஏ. நமாஸ்

ஆனமடுவ பங்கதெனிய வீதியில் கொலஎளிய எனுமிடத்தில்; இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு வயது பேத்தியுடன்  70 வயது பாட்டியொருவர்உயிரிந்துள்ளதுடன் மற்றுமொரு குழந்தை காயமடைந்துள்ளது என பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

டிப்பர் ரக லொறி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே இவ்விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் நெவுல் ரண்மல் ( வயது 1) மற்றும் சுசீலா எமலின் (வயது 70 ஆகியோரே) இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் பலியான முதாட்டியின் மகள் செலுத்திச் சென்ற மோட்டார் சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 32 வயதுடைய பெண் மற்றும் அவருடைய மற்றுமொரு சிறுமி சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய டிப்பர் லொறிச் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பள்ளம பொலிசார் மேற்கொண்டு வருகன்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .