2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மது போதையில் சாரதி, நடத்துனரை தாக்கிய மூவர் கைது

Super User   / 2013 ஏப்ரல் 30 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

மது போதையில் பஸ் வண்டியின் சாரதி மற்றும் நடத்துனரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்பில் மூன்று இளைஞர்களை மிஹிந்தலை பொலிஸார் நேற்று  கைதுசெய்துள்ளனர்.

அநுராதபுரம் -  ரத்மல்கஹவௌ பிரதேசத்தில் பயணிக்கும் பஸ் வண்டியொன்றில் சாரதி மற்றும் நடத்துனரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

மது போதையில் இருந்த மூன்று இளைஞர்கள் பஸ் வண்டியில் ஏறி அநாகரீகமான முறையில் செயற்பட்டதோடு பயணிகளுக்கு பெரும் இடைஞ்சலையும் ஏற்படுத்தினர்.

இதனைத் தடுக்க முற்பட்ட சாரதி மற்றும் நடத்னரை சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை மஹிந்தலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .