2025 மே 21, புதன்கிழமை

மாட்டு வண்டியில் ஐதேக பிரசாரம்

A.P.Mathan   / 2013 மே 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்
 
நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன், ஆனமடுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாட்டு வண்டியிலும் துவிச்சக்கர வண்டியிலும் பயணம் செய்து, ஐக்கிய தேசிய கட்சிக்கான அங்கத்துவ படிவத்தினை மக்களுக்கு வழங்கினார்.
 
வாழ்க்கை செலவு மற்றும் எரிப்பொருள் விலையுயர்வு, மின் கட்டணம் அதிகரிப்பு என்பனவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தே அவர் இப் பயணத்தினை மேற்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அங்கத்துவர்களுக்கு அங்கத்துவ படிவத்தினை வழங்கினார்.
 
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் வீட்டுக்கு வீடு திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பிக்கப்பட்டமையும் இந்நிகழ்வுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, மைக்கல் ஜோசப் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X