2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பதற்காக புத்தளத்தில் காரியாலயம்

Suganthini Ratnam   / 2013 மே 28 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எழுகின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கக்கூடிய வகையில் புத்தளம் மாவட்ட செயலகத்தில் காரியாலயம் ஒன்று அமைக்கப்படும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்து புத்தளம் மாவட்டத்தில் வாழ்கின்ற வடமாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று செவ்வாய்க்;கிழமை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் கிராம சேவகரிடம் சான்றிதழ் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் தேர்தல் இடாப்பு திருத்தம் தொடர்பிலும் மத்தியஸ்தர் சபை அமைப்பது தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முத்தலீப் பாவா பாறுக், புத்தளம் மாவட்ட செயலாளர் கிங்ஸிலி பெர்னாண்டோ, பிரதேச செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X