2025 மே 21, புதன்கிழமை

கடத்தப்பட்டதாக கூறப்படும் நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது

Kogilavani   / 2013 ஜூன் 01 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

நாத்தாண்டி, பிரதேசத்தில் கடத்திசெல்லப்பட்டதாக கூறப்படும் நபரை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரே கைதுசெய்துள்ளதாக மாராவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாத்தாண்டி,  கால்வாய் வீதியில் வசிக்கும் ரஜித லக்மால் (வயது 34) என்ற நபர் வான் ஒன்றில் வந்தவர்களால் நேற்று மாலை கடத்திசெல்லப்பட்டதாக அவரது மனைவி மாறவில பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம் முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மேற்படி நபர் கடத்தப்படவில்லை என்றும் அவர், குளியாப்பிட்டி விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். 

பின்னர் இது தொடர்பில் அவரது குடும்பத்தினருக்கும் மாறவில பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட நபர் அரச திணைக்களமொன்றில் காவலாளியாகவும் சிறு வியாபாரமும் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X