2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டர் ஒட்டி சந்திரவட்டக்கற்கள் கொள்ளை

Kanagaraj   / 2013 ஜூன் 04 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்குவின் வாய்க்கு பிளாஸ்டரை ஒட்டிவிட்டு விஹாரையிலிருந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ள  சம்பவமொன்று கெப்பத்திக்கொல்லாவையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

கெப்பத்திக்கொல்லாவா, ஹேரத் ஹில்மிலேவ விஹாரையிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் இன்று அதிகாலை 1 மணியிலிருந்து மூன்று மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விஹாரைக்குள் புகுந்த கொள்ளை கோஷ்டியினர் விஹாராதிபதி மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஆகிய இருவரின்  வாய்களுக்கும் பிளாஸ்டரை ஒட்டிவிட்டே பெறுமதிவாய்ந்த ஐந்து சந்திரவட்டக்கற்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திவருவதாகவும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO. Tuesday, 04 June 2013 03:15 PM

    ப்ளாஸ்டர் ஒட்டப்படவேண்டியவர்கள் எங்கோ இருக்கிறார்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .