2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பாதுகாப்பான இடங்களில் நீராடுமாறு அறிவுறுத்தல்

Kogilavani   / 2013 ஜூன் 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன் 

அநுராதபுரத்திலுள்ள குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுவதால் பொஸன் உற்சவத்திற்காக அநுராதபுரத்திற்கு வருகை தரும் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் மாத்திரம் நீராடுமாறு மாவட்டச் செயலாளரும் பொஸன் உற்சவத் தலைவருமான மஹிந்த செனவிரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாச்சியாதீவு, திஸாவாவி, மஹாகனந்தராவாவி, நுவரவாவி, வசவக்குளம் உட்பட பல குளங்களின் நீர்மட்டம் அதிகரித்துக் காணப்படுவதாகவும் இக்குளங்களுக்கருகில் 20 உயிர்காப்புக் குழுக்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குளிப்பதற்கு உகந்த இடம் என காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மாத்திரம் குளிக்குமாறும் வேறு இடங்களில் நீராடுவது ஆபத்தானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X