2025 ஜூலை 09, புதன்கிழமை

சேதனப் பசளை உற்பத்தி திட்டத்தை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க நடவடிக்கை

Kogilavani   / 2013 ஜூலை 13 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். சீ. சபூர்தீன் 

சேதனப் பசளை உற்பத்தி திட்டத்தை எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் நாடு முழுவதிலுமுள்ள 556 கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இதேவேளை அநுராதபுரம் மாவட்டத்தில் 41 கமநல சேவைகள் நிலையங்கள் ஊடாக 20 ஆயிரம் விவசாயக் குடும்பங்களை இணைத்துகொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சேதனப் பசளை உற்பத்தி திட்டத்தை மேற்கொள்ளும் விவசாயிகளுக்குத் தேவையான சகல உபகரணங்கள் மற்றும் ஆலோசனைகளும் அரசினால் இலவசமாக வழங்கப்படவுள்ளதோடு உற்பத்தி செய்யப்படும் பசளையினை கிலோ ஒன்றுக்கு 8 ரூபா வீதம் கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர்  மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .