2025 ஜூலை 09, புதன்கிழமை

பண மோசடி சம்பவம் தொடர்பில் விசாரணை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 16 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி  பண மோசடி செய்யப்பட்ட சம்பவமொன்று தொடர்பில் விசாரணையை முன்னெடுத்துள்ளதாக சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி  சுமார் 12 இலட்சத்து ஏழாயிரம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தன்னை கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி தன்னிடம் குறித்த பணத்தை மாரவில பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெற்றுக்கொண்டார். இவர் தன்னிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு பல மாதங்களான நிலையிலும் கூட, இதுவரையில் தன்னை அவர் வெளிநாட்டுக்கு அனுப்பவோ  அல்லது தன்னிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தை திருப்பித் தரவோ இல்லையென பாதிக்கப்பட்ட நபர் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதுடன்,  சந்தேக நபரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .