2025 மே 15, வியாழக்கிழமை

சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

Super User   / 2013 ஜூலை 17 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இரு சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகச் சொல்லப்படும் நால்வரில் ஒருவரைக் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தைப் பொலிஸார் தெரிவித்தனர்.  பாதிக்கப்பட்ட சிறுமிகளுள் 14 வயதுடைய மன நோயால் பீடிக்கப்பட்டவரும் அடங்குவதோடு மற்றைய சிறுமி 13 வயதுடை அவரின் சகோதரியாவார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விரு சிறுமிகளும் தங்கொட்டுவை ஹால்தவன எனும் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.  கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்  பாதிக்கப்பட்ட  சிறுமிகளது மற்றொரு சகோதரியின் கணவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சிறுமிகளது தந்தை அவர்களது தாயைப் பிரிந்து சென்றதன் பின்னர் தாய் வேறொருவருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் சிறியதொரு வீட்டில் வாழந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமிகளின் சகோதரி ஒருவரின் 26 வயதுடைய கணவரினால் இச்சிறுமிகள் பல தடவைகள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் அவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் மேலும் மூவரும் இச்சிறுமிகளை இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்ட சிறுமிகளின் பாட்டி சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.  இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஒரவரைக் கைது செய்துள்ளதோடு ஏனைய சந்தேக நபர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் கொஸ்வத்தை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .