2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

காட்டு யானைகளை வனப் பிரதேசத்திற்குள் துரத்தும் நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 18 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


புத்தளம் மாவட்டத்தின் 3 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலிருந்தும் காட்டு யானைகளை தவ்போவ பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்திற்குள் துரத்தும் நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.

கடந்த 16ஆம் திகதியிலிருந்து  ஆரம்பிக்கப்பட்ட இந்நடவடிக்கையானது தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறவுள்ளது. புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவு  ஆனைமடுவ பிரதேச செயலாளர் பிரிவு, கருவெலகஸ்வௌ பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார். 

இந்நடவடிக்கையில் வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பகல், இரவாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இக்காட்டு யானைகளை தவ்;போவ காட்டுக்குள் துரத்தி விடுவதன் மூலம் 1,000 இற்கும்; மேற்பட்ட குடும்பங்கள் காட்டு யானைகளிடமிருந்து பாதுகாக்கப்படைவார்களெனவும் புத்தளம் பிரதேச செயலாளர்  தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .