2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இரு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவலகஸ்வெவ பகுதியிலுள்ள பொலிஸ்  குடியிருப்பொன்றைச் சேர்ந்த  பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர்  பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். 

மதுபோதையில் காணப்பட்ட இவ்விரு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில்  தவறான முறையில் நடந்துகொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் இருவரும் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1,000 ரூபா தொடர்பிலேயே இவர்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை இரவு குழப்பம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (ஹிரான் ஜயசிங்க)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X