2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பாலாவியில் தேசத்திற்கு மகுடம் நடமாடும் சேவை

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 16 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்
 
"தேசத்திற்கு மகுடம்" அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புத்தளம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் குறைகளை இனங்கண்டு அவற்றைத் தீர்த்து வைக்கும் நடமாடும் சேவைகளில் ஒருகட்டமாக புத்தளம் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலாவி கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கான நடமாடும் சேவை இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 
புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் புத்தளம் ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர பிதாவுமான கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டதோடு இரத்த பரிசோதனைகளும் செய்து கொடுக்கப்பட்டன. அத்துடன் காணி, மின்சாரம், அடையாள அட்டை, குடிநீர் போன்ற அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன. 
 
இந்த சேவையில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து பயனடைந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X