2025 மே 15, வியாழக்கிழமை

வல்லுறவுக் குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 01 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இரண்டு வருடங்களாக சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தி வந்ததாகக் கூறப்படும் 62 வயதான ஒருவரை நேற்று சனிக்கிழமை கைதுசெய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

12 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சந்தேக நபரின் வீட்டிலேயே இந்தச் சிறுமியின் குடும்பத்தினர் வாடகை செலுத்தி குடியிருந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

2011ஆம் ஆண்டு தொடக்கம் நேற்றுமுன்தினம் வரை சந்தேக நபர், இந்தச் சிறுமியை தொடர்ச்சியாக  வல்லுறவுக்கு உட்படுத்தி வந்துள்ளார் என்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேக நபரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பாதிக்கப்பட்டுள்ள சிறுமி வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .