2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

முள்ளிபுரம் பிரதேசத்தில் நடமாடும் சேவை

Kogilavani   / 2013 செப்டெம்பர் 02 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முள்ளிபுரம் பிரதேசத்தில் நடமாடும் சேவை இன்று வெட்டாளை அஸன்குத்தூஸ் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம்.மலிக் தலைமையில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளரும் புத்தளம் நகரசபை தலைவருமான கே.ஏ. பாயிஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இந்த நடமாடும் சேவையின் போது மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு, இரத்தப் பரிசோதனைகள், கண் பரிசோதனைகள், வைத்திய பரிசோதனைகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X