2025 மே 15, வியாழக்கிழமை

அநுராதபுரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டம்

Suganthini Ratnam   / 2013 செப்டெம்பர் 12 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

750 மில்லியன் டொலர் செலவில் அநுராதபுரத்தை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைப்படி அநுராதபுரம் நகரத்தின் பொது வேலைகளுக்காக இந்நிதி செலவிடப்படவுள்ளது.

இதன் கீழ் அநுராதபுரம் நகரத்தில் 4,000 இருக்கைகளைக் கொண்ட பாரிய கேட்போர்கூடமொன்று அமைக்கப்படவுள்ளதோடு, அநுராதபுரம் நகரத்திற்குள் பிரவேசிக்கும் 4 திசைகளிலும் 4 வரவேற்பு நுழைவாயில்களை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு மல்வத்துஓயா புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அதனைப் பாதுகாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அநுராதபுரம் நகரத்திலுள்ள கும்பிஞ்சங்குளம் அபிவிருத்தி செய்யப்பட்டு சுற்றுலா வலயமாகவும் விருத்தி செய்யப்படவுள்ளது. இதில் ஓய்வு இருக்கைகள், சிறுவர் பூங்கா, சிறுவர் விளையாட்டு மைதானம் என்பன அமைக்கப்படவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .