2025 மே 15, வியாழக்கிழமை

'இனவாதம் பேசி அரசியல் செய்வோரை நிராகரிக்க வேண்டும்'

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-இக்பால் அலி

இனவாதக் கருத்துக்களைக் கூறி அரசியல் செய்வோரை முஸ்லிம்கள் நிராகரிக்க வேண்டும் என பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் அப்துல் சத்தாரை அதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பெரும்பான்மையினமாக வாழும் சிங்கள பௌத்த இன மக்கள் மத்தியிலே நாங்கள் சிறு தொகையினராக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாங்கள் எல்லா இன மக்களுடனும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். எங்களால் ஆட்சியைப் பிடிக்கவோ ஆட்சி மாற்றம் செய்யவோ முடியாது. இந்நாட்டில் பலமான எதிர்கட்சி ஒன்று இல்லை.

எனவே இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் வெற்றி பெறப்போவது என்பது நாம் அனைவருக்கும் தெட்டத் தெளிவாகத் தெரியும். இந்த சந்தர்ப்பத்தில் எமது மதிநுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்து கொள்ள வேண்டும். குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் வெற்றி அரசாங்கம் சார்பாக முஸ்லிம் அரசியல் பிரதிநிதி தெரிவு செய்வதன் மூலம்தான் தங்கியுள்ளது.

இன்று முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் இல்லை என்று கூற வரவில்லை. பிரச்சினை இருக்கின்றது. ஆனால் அந்தப் பிரச்சினைகளுக்குரிய தீர்வையும் பாதுகாப்பு உறுதிப்பாடடையும் பெற்றுக்கொள்வதாயின் அரச தரப்பில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அவசியமாகும்.

வெறுமனே இனவாதக் கருத்துக்களைப் பரப்பி சமூகத்தை ஏமாற்றி வாக்குகளை சுவீகரிக்கின்ற அரசியல் கலாசாரத்தை முஸ்லிம் மக்கள் நிராகரிக்க வேண்டும். குருநாகல் மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்களுடைய தேவைப்பாடுகள் அதிகம். பாடசாலை அபிவிருத்தி, பாதை அபிவிருத்தி உள்ளிட்ட பல பிரச்சினைகள் இருந்து கொண்டிருக்கின்றன" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .