2025 ஜூலை 10, வியாழக்கிழமை

தாய் சேய் சிகிச்சை நிலையத்திற்கு அடிக்கல் நடல்

Super User   / 2013 செப்டெம்பர் 15 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ்


அடுத்த வருடம் நடைபெறவுள்ள தேசத்திற்கு மகுடம் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக புத்தளம், சவீவபுரம் பகுதியில் புதிய தாய் சேய் சிகிச்சை நிலையமொன்று அமைக்கப்படவுள்ளது.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸின் வேண்டுகோளுங்கினங்க, இக்கட்டிட நிர்மானத்துக்கென சுமார் 120 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் தில்லையடியிலும் சகல வசதிகளினையும் உடைய தாய் சேய் சிகிச்சை நிலையமொன்றும் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .