2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் தந்தை,மகள் பலி; தாய், மகன் காயம்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம் புத்தளம் வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த தந்தையும் மகளும் பலியானதுடன் தாயும் மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தரவெவ எனுமிடத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஐஸ் ஏற்றிக்கொண்டு சென்ற லொறி பஸ்ஸூடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியிலிருந்த மூன்றரை வயது பெண் குழந்தை மற்றும்  32 வயதான தந்தை ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். தாயும் அவர்களுடைய ஒன்றரை வயதான குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்தனர்.

லொறிக்கு முன்பாக வந்துகொண்டிருந்த பஸ்ஸை பொலிஸ் சோதனை சாவடியில் வைத்து பொலிஸார் நிறுத்தியவேளை பின்னால் வந்துகொண்டிருந்த லொறி பஸ்ஸில் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

நீர்கொழும்பில் திருமண வீடொன்றுக்கு சென்று திரும்பி கொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0

  • amr Tuesday, 17 September 2013 04:55 AM

    இவ்வாறான நிலை ஏற்படக் காரணமான பொலிஸார் தண்டிக்கப்பட வேண்டும் - ஏனென்றால் இவ்வாறான பேய்த்தனமான வேலைகளை பொலிஸார் அதிகமாகச் செய்கின்றனர்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X