2025 மே 15, வியாழக்கிழமை

வேட்பாளர் மீதான தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Super User   / 2013 செப்டெம்பர் 16 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க


மாகாண சபை வேட்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை புத்தளம் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

வட மேல் மாகாண சபை தேர்தலுக்கு புத்தளம் மாவட்டத்தில் தேசிய ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.எம். பைறூஸ் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் கற்பிட்டி, நுரைச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தினை கண்டித்தே இன்று புத்தளம் பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். குற்றளவாளிகளை கைது செய்யுமாறு இதன்போது கோசங்கள் எழுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .