2025 மே 15, வியாழக்கிழமை

துண்டாடப்பட்ட ஆணுறுப்பு இணைப்பு

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 07 , பி.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

முழுமையாக துண்டாடப்பட்ட ஆணுறுப்பு 12 மணிநேர சத்திர சிகிச்சையின் பின்னர் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

குழந்தையொன்றின் தந்தையான புத்தளத்தைச்சேர்ந்த 27 வயதான ஒருவரின் துண்டாடப்பட்ட ஆணுறுப்பே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது.

புளோக்கல் உற்பத்தி செய்யும் குறித்த நபரின் ஆணுறுப்பானது விந்தகத்துடனேயே துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சைப்பிரிவு வைத்தியர்கள் குழுவே 12 மணிநேரம் மேற்கொண்ட சத்திரசிகிச்சையின் பின்னர் துண்டாடப்பட்ட விந்தகத்துடனான ஆணுறுப்பை வெற்றிகரமான நேற்று திங்கட்கிழமை இணைத்துள்ளனர்.

இந்த சத்திரசிகிச்சை குழுவில் ஒன்பது வைத்தியர்கள் இருந்ததாக தேசிய வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

இவ்வாறான சத்திரசிகிச்சையொன்று உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்டது இதுவே முதன்முறையாகும் என்பதே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களின் கருத்தாகும்.

அரிவாள் ஒன்றின் மூலமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் கருத்து தெரிவிக்கையில்,

இந்த  நோயாளி புத்தளம் வைத்தியசாலையிலிருந்தே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். உடல் வேறாகவும் ஆணுறுப்பு விந்தகத்துடன் வேறாகவும் இருந்தது.

அதிகாலை நான்கு மணியளவில் விந்தகம் உடலிலிருந்து வேறாக்கப்பட்டதாகவும் வெட்டுக்காயம் ஏற்பட்ட தெரிவிக்கப்படும் அதேவேளை நான்கு மணிநேரத்திற்கு பின்னரே நோயாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சத்திர சிகிச்சை வெற்றியளிப்பதற்கு நோயாளி வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு எடுக்கப்பட்ட காலம் மற்றும் துண்டிக்கப்பட்ட விந்தகம் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட முறைமை முக்கியமானதாக அமைந்தது.

இது உலகத்திலேயே மேற்கொள்ளப்பட்ட முதலாவது சத்திரசிகிச்சையாகவே நாம் கருதுகின்றோம்.

ஒரே அறுவையில் ஆணுறுப்பு விந்தகத்துடன் அறுக்கப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் போது முதன்முதலில் மூத்திர குழாய் இணைக்கப்பட்டதுடன் அதற்கு பின்னர் ஏனைய நரப்பு தொகுதிகள் இணைக்கபட்டன.

விந்தகம் துண்டாடப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளியின் மனைவி பொலிஸில் செய்துள்ள முறைப்பாட்டில் அவரே அறுத்துகொண்டாதாக வாக்குமூலமளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .