2025 ஜூலை 12, சனிக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் பிணையில் விடுதலை

Super User   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.என்.எம்.ஹிஜாஸ், ஹிரான் ஜயசிங்க


வட மேல் மாகாண சபை உறுப்பினர் அசோக்க வடிவமங்கா இன்று புதன்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்ட செயலாளரின் பெயருக்கு பங்கம் எற்படுத்தியதாக மாகாண சபை உறுப்பினர் அசோக்க வடிவமங்காவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று  விசாரனைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது மாகாண சபை உறுப்பினரை பிணையில் செல்ல புத்தளம் நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க அனுமதியளித்தார். இதன்போது தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணையில் மாகாண சபை உறுப்பினர் விடுவிக்கப்பட்டார்.

புத்தளம் சென்.  அன்றூஸ் பாடசாலையில் வாக்குச்சீட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டபோது அங்கு வந்த மாவட்ட செயலாளரினை, அவருடை பெயருக்கு பங்கம் ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொண்டார் என மாகாண சபை உறுப்பினர் அசோக்க வடிவமங்காவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .