2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாதம்பேயில் வெடிப்பு: ஒருவர் படுகாயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜுட் சமந்த


மாதம்பேயில் சற்று முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாதம்பே-சுதுவெல்லயிலுள்ள பழைய இரும்பு கடையிலேயே இந்தவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அவ்விடத்தில் பழைய இரும்புகளை உருக்கும் தொழிற்சாலையும் இருப்பதனால் என்ன வெடித்துள்ளதுதென்று இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்த மாதம்பே பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, ஆட்லெறிக்கு பயன்படுத்தப்பட்ட ரவையே வெடித்து சிதறியிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக தெரிவித்த பொலிஸார்  பயன்படுத்தப்பட்ட ஆட்லெறிக்கான ரவைகள் சிலவற்றை அந்த இடத்திலிருந்து மீட்டுள்ளதாகவுமு; தெரிவித்தனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X