2025 மே 14, புதன்கிழமை

வென்னப்புவ பிரதேச சபை உறுப்பினர் கைது

Super User   / 2013 நவம்பர் 05 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வென்னப்புவ பிரதேச சபை ருக்மன் கொலம்பக  உறுப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தாலி நாட்டுக்கு தொழிலுக்காக அனுப்புவதாகக் கூறி நான்கு பேரிடம் சுமார் 9 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுப்ட்டhர் என்ற குற்றச்சாட்டிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மோசடி தொடர்பில் சிலாபம் பிரிவிக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேகநபரான பிரதேச சபை உறுப்பினர் வென்னப்புவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச சபை உறுப்பினரை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வென்னப்புவ பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .