2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2014 ஜனவரி 15 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

இபலோகம பிரதேசத்தின் மயனாமொன்றுக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் உயிரிழந்தவரின் சடலத்தை மீட்டுள்ளதாக  சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். 

இபலோகம பிரதேசத்தைச் சேர்ந்த அபெசிங்க முதியான்சேலாகே உக்கு பண்டா (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார்.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை சென்ற இவர்,  வீட்டுக்குத் திரும்பாததைக் கண்டு சாலியவெவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்கள் முறைப்பாடு செய்தனர்.    இதனைத் தொடர்ந்து இவரைத் தேடியபோது, சடலமாக காணப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர். 

சடலம்  பிரேத பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் சைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .