2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு

Super User   / 2014 ஜனவரி 15 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.முஸப்பிர்


புத்தளத்தினைச் சேர்ந்த மூன்று மூத்த ஊடகவியலாளர்கள் புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் சங்கத்தினால் நேற்று செவ்வாய்க்கிழமை கௌரவிக்கப்பட்டுள்ளர். 

புத்தளம் நகரில் இடம்பெற்ற மீலாத் விழா பரிசளிப்பு நிகழ்வின்போதே இவர்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் மிக நீண்டகாலமாக ஊடகத்துறையில் பணியாற்றும் புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் சங்கத்தின் உறுப்பினர்களான எஸ்.ஏ.புல்கி, எம்.யூ.எம்.சனூன் மற்றும் எம்.ஐ.எம். அப்துல் லத்தீப் ஆகியோரே கௌரவிக்கப்பட்டனர்.

மர்ஹூம் எச்.எஸ்.இஸ்மாயில் மன்றமும் பரிஸ்டர் எம்.எச்.எம். நெய்னா மரிக்கார் மன்றமும் இணைந்தே இந்த  மீலாத் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .