2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

பாடசாலைகளின் கல்வி தராதரத்தை அதிகரிக்கும் கலந்துரையாடல்

Gavitha   / 2014 ஜூலை 19 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன், எம்.எஸ். முஸப்பிர், எம்.என்.எம். ஹிஜாஸ்


புத்தளம் நகர பாடசாலைகளின் கல்வி தராதரத்தை அதிகரிக்கும் நோக்கில் புத்தளம் நகர முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களுடனான கலந்துரையாடலொன்று புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரியில் வெள்ளிக்கிழமை (18) மாலை இடம்பெற்றது.

புத்தளம் மாவட்ட ஜம்இயதுல் உலமா சபை, புத்தளம் பெரிய பள்ளி,புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரி என்பன கூட்டாக இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

 புத்தளம் நகர முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள், அரபுக்கல்லூரிகளின் அதிபர்கள்,  அபிவிருத்தி சபை உத்தியோகத்தர்கள்,கல்வி அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு புத்தளம் மாவட்ட ஜம்இயதுல் உலமா சபை தலைவர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் தலைமை வகித்தார்.

பாடசாலை விடுமுறையின் பின்னரான முதல் நாளில் மாணவர்களின் வருகையின் வீழ்ச்சி, அந்த முதல் நாளில் பாடங்கள் நடைபெறாமை மற்றும் விளையாட்டு போட்டிகளின் போது போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களை தவிர ஏனைய மாணவர்களின் பாடங்கள்  வீணடிக்கப்படுகின்றமை போன்ற விடயங்கள் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இத்தகைய நிலைமைகளை மாற்றி அமைக்கும் தோரணையில் எதிர்வரும் ரமழானுக்கு, பிந்திய பாடசாலையின் முதல் நாளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் பாடசாலை ஆரம்பிக்க இரு நாட்களுக்கு முன்னதாகவே பெற்றோர்களை பாடசாலைக்கு வரவழைத்து சிரமதானம் மூலம் பாடசாலையை துப்பரவு செய்வதென்றும், இது தொடர்பாக பெற்றோர்களை விழிப்படையச் செய்யும் நோக்கில் வீட்டுக்கு வீடு துண்டுப்பிரசுங்கள்  விநியோகிப்பதென்றும், பெருநாள் கொத்துபாக்களில் இது பற்றி  தெளிவுபடுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X