2025 மே 09, வெள்ளிக்கிழமை

பாலர் பாடசாலைக்கு அருகில், கஞ்சா விற்றவர் கைது

George   / 2014 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். எஸ். முஸப்பிர்

பள்ளம பிரதேசத்தில், பாலர் பாடசாலை ஒன்றுக்கருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடமிருந்து, சிறியளவிலான 27 கஞ்சா பக்கட்டுக்களும் ஒரு இலட்சத்து 580 ரூபாய் பணம் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பவற்றுடன் அவர் உபயோகித்த முச்சக்கர வண்டியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சில காலமாக பள்ளம வத்துபொல வீதியில் அமைந்துள்ள பாலர் பாடசாலைக்கருகில் இவ்வாறு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

சிலாபம் பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் மூலமாகவே தனக்கு கஞ்சா கிடைப்பதாக கைதுசெய்யப்பட்ட, பள்ளம பொத்துக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை, புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, பள்ளம பொலிஸார் மேலும் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X