2025 மே 09, வெள்ளிக்கிழமை

கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

மாரவில, தல்வில பகுதியிலுள்ள  ஆற்றுப்பகுதியை அண்டிய காட்டுப் பிரதேசத்தில் கடந்த சில காலமாக இரகசியமாக இயங்கிவந்த 2 கசிப்பு உற்பத்தி நிலையங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை முற்றுகையிடப்பட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் மூவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், 240 போத்தல் கசிப்பு,  கோடா, 2 செப்புக்கம்பிச் சுருள்கள், பிளாஸ்டிக் கலன்கள்  உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த முற்றுகை முன்னெடுக்கப்பட்ட வேளையில் அங்கு கசிப்பு உற்பத்தி இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X