2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 22 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹக்கும்புக்கடவள ஜயராஜபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில், இன்று (22) அதிகாலை 4.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற முந்தல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீட்டின் முன் விறாந்தையில் கைக்குண்டு என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதனால் அங்கிருந்த பொருட்கள், ஜன்னல் கதவுகள், சுவர் என்பன சேதத்துக்;குள்ளாகியிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர் மற்றொருவரைத் தாக்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு நேற்று  புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் அவர்; இம்மாதம் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது வீட்டில் அவரது மனைவியும் பிள்ளைகளுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைக்குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள வீட்டு உரிமையாளருக்கும் மற்றொருவருக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்துடன் இக்கைக்குண்டுத் தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாகத் தெரிவிக்கும் முந்தல் பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X