2025 மே 09, வெள்ளிக்கிழமை

முதலாவது கன்னி காதி நீதிமன்ற அமர்வு

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் ஏற்கெனவே புதிதாக திறந்து வைக்கப்பட்ட புத்தளம் மாவட்ட காதி நீதிமன்ற கட்டட தொகுதியில், முதலாவது கன்னி காதி நீதிமன்ற அமர்வுகள் இன்று (01) காலை இடம்பெற்றன.

புத்தளம் நகர வரலாற்றில், காதி நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல இது வரை காலமும் நிரந்தர கட்டடம் எதுவும் இருக்கவில்லை. பாடசாலைகள், பொது சங்கங்கள் என்பவற்றிலேயே இது வரை காலமும் காதி நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டன.

எனினும் முஸ்லிம்களுக்கான காதி நீதிமன்றம் தனியாக வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்த நிலையில், புத்தளம் நகர மத்தியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட காதி  நீதிமன்ற கட்டட தொகுதி, 2013 செப்டம்பர் 16ஆம் திகதி நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த காதி நீதிமன்ற கட்டடம் திறந்து வைக்கப்பட்டபோதும் அங்கு எவ்வித வளங்களும் இல்லாத நிலையில் இது வரை காலமும் கைவிடப்பட்ட நிலையிலேயே அது காணப்பட்டது.

இந்நிலையில், புதிதாக புத்தளம் மாவட்டத்துக்கு காதி நீதிபதியாக தெரிவாகியுள்ள புத்தளம் மாவட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.எம்.எஸ். அப்துல் காதர், தமது நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல குறிப்பிட்ட இந்த காதி நீதிமன்ற கட்டடத்தை நாடியபோது, புத்தளம் நகர முதல்வர் கே. ஏ. பாயிஸின் முயற்சியின் பலனாக சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் செலவில் சகல வளங்களும் உடனடியாக பெற்றுக்கொடுக்கப்பட்டன. புத்தளம் சமூக நல்வாழ்வுக்கான சபையும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது.

இதனையடுத்தே,  புதிய  கட்டடத்தில் காதி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகின. இந்நிகழ்வில், புத்தளம் நகர பிதா கே.ஏ. பாயிஸ், நகர சபை உறுப்பினர்களான எஸ்.ஆர்.எம். முஹுஸி, டி.எம். அமீன், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோகா குணவர்த்தன உள்ளிட்ட சட்டத்தரணிகள், உலமாக்கள், கல்வி அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

ஆரம்ப நிகழ்வுகளை அடுத்து புதிய காதி நீதிபதி அப்துல் காதர் வழக்குகளையும் விசாரிக்க ஆரம்பித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X