2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஆத்ம சாந்தி பூஜை

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

கொஸ்லாந்த மீரியாபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவில் உயிர் நீத்த மக்களின் ஆத்ம சாந்திக்காக புத்தளம் சர்வ மத ஒன்றியமும் புத்தளம் பொலிஸ் நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்த ஆத்ம சாந்தி பூஜை வெள்ளிக்கிழமை (07) மாலை புத்தளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது, மண்சரிவில் உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்து மோட்ச தீபம் ஏற்றி வைக்கப்பட்டதோடு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஆத்ம சாந்தி பூஜைகளை ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சுந்தாராம குருக்கள் நடாத்தி வைத்தார்.

இந்நிகழ்வில், புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அசோகா குணசேகர, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் சென் மேரிஸ் ஆலயத்தின் அருட்தந்தை எரங்க, ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள், புத்தளம் ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X