2025 மே 09, வெள்ளிக்கிழமை

நகை கடையில் தீ

Gavitha   / 2015 ஜனவரி 19 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம்- மன்னார் வீதியில் அமைந்துள்ள அம்மன் நகை அடகு பிடிக்கும் மற்றும் விற்பனை செய்யும் கடையில் திங்கட்கிழமை (19) திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தளபாடங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன என்று புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடையில் ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாகவே இத்தீவிபத்து ஏற்பட்டது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணசேகர தலைமையிலான குழு சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் மற்றும் தீயணைக்கும் பிரிவினரின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

வியாபார நிலையத்தில் இருந்த நகைகள் யாவும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் கடையிலிருந்த சில தளபாடங்கள் மாத்திரம் எரிந்து நாசமாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X