2025 மே 08, வியாழக்கிழமை

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.புல்கி காலமானார்

Princiya Dixci   / 2015 பெப்ரவரி 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன், இக்பால் அலி

சிரேஷ்ட ஊடகவியலாளர், கலாபூசணம் ஏ.எஸ்.எம்.புல்கி இன்று புதன்கிழமை (25) காலை புத்தளத்தில் காலமானார்.
சிறிது காலம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அவரது வீட்டிலேயே சுகவீனமுற்ற நிலையில் வாழ்ந்து வந்தார்.

69 வயதான ஏ.எஸ்.எம்.புல்கி 40 வருடங்களுக்கும் மேலாக அச்சு மற்றும்  இலத்திரனியல் ஊடகங்களுக்கு புத்தளம் பிராந்திய நிரூபராக செயற்பட்டு வந்தார்.

பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ள அவர் சிறந்த நாடக நடிகரும், மேடை அறிவிப்பாளரும் ஆவார். இவர் சுகவீனமுற்று வீட்டிலிருந்தபோது ஊடகவியாலாளர்கள், பிரமுகர்கள் என பலரும் புத்தளம் நகரிலுள்ள அவரின் வீட்டுக்கு விஜயம் செய்து சுகம் விசாரித்து வந்தனர்.

அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 8.15க்கு புத்தளம் வெட்டுக்குளம் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
புத்தளம் மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் இவரின் மறைவு குறித்து ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X